புவியியல்
1) இமயமலையின் வேறு பெயர்?
வடக்கு மலைகள்
2) பனியின் உறைவிடம் எனப்படுவது ?
இமயமலை
3) இமயமலையின் கிழக்கு மேற்கு எல்லைகள் எவை ?
மேற்கு – ஜம்மு காஷ்மீரில் உள்ள சிந்து பள்ளத்தாக்கு
கிழக்கு – அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு
4) பாஞ்சியா நிலப்பகுதியின் வடபகுதி?
அங்காரா
5) பாஞ்சியா நிலப்பகுதியின் தென்பகுதி?
கோண்டுவானா
6) அங்காரா கோண்டுவானா நிலப்பகுதிகளை பிரிக்கும் கடல்?
டெத்தீஸ்
7) மடிப்பு மலைக்கு எ.கா ?
இமயமலை
8) உலகின் பழைமையான மலைத்தொடர்?
ஆரவல்லி மலைத்தொடர்
9) K2 சிகரம் அமைந்துள்ள பகுதி எது?
மேற்கு இமயமலை ( காரகோரம்)
10) காரகோரத்தின் தெற்கில் அமைந்துள்ள பனியாறுகள் யாவை?
சியாச்சின் , பல்டோரா
இந்தியா குறித்த சில தகவல்கள்
1) இந்தியா ஆசியாவின் எப்பகுதியில் அமைந்துள்ளது ?
தென் பகுதி
2) வரலாற்றுக் காலத்தில் இந்தியா எவ்வாறு அழைக்கப்பட்டது ?
பாரதம் , ஹிந்துஸ்தான்
3) பாரதம் என எதனால் பெயர் பெற்றது ?
பரதன் என்னும் வலிமை வாய்ந்த அரசன் பெயர்
4) ஹிந்துஸ்தான் என எதனால் பெயர் பெற்றது ?
சிந்து நதியால்
5) இந்தியா என பெயரிட்டவர்கள் யார் ? எதனால்?
ஐரோப்பியர்கள் , சிந்து என்னும் சொல்லின் அடிப்படையில்
6) இந்தியாவுடன் வணிக தொடர்பு கொள்ளப் பயன்படும் கால்வாய்கள்?
சூயஸ் கால்வாய் – ஐரோப்பிய நாடுகள்
மலாக்கா நீர்சந்தி – சீனா , ஜப்பான் , ஆஸ்திரேலியா
7) ஆசியாவிலேயே இரண்டாம் மிகப் பெரிய நாடு ?
இந்தியா
8) இந்திய திட்ட நேரத்தை கணக்கிட உதவும் ரேகை எது?
82’30’ கிழக்கு தீர்க்கம்
9) இந்திய திட்ட நேரத்தை கணக்கிட உதவும் ரேகை எந்த இடத்தின் வழியே செல்கிறது ?
அலகாபாத்
10) இமயமலைகள் எந்த வடிவத்தில் உள்ளன?
வில்
புவியியல்
1) ஈரப்பதத்தை தக்க வைக்காத மண் எது ?
செம்மண்
2) வெப்ப மண்டல பருவக்காற்று காலநிலையில் உருவாகும் மண் எது?
சரளை மண்
3) தேயிலை பயிரிடுதலில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது ?
அஸ்ஸாம் , மேற்கு வங்காளம்
4) மூங்கில் , பர்ன் போன்ற மரங்கள் காணப்படும் காடுகள்?
வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள்
5) இலையுதிர் காடுகள் எனப்படுவது ?
வெப்ப மண்டல பருவக்காற்று காடுகள்
6) வணிக ரீதியாக முக்க்கியமான காடுகள் எவை ?
வெப்ப மண்டல பருவக்காற்று காடுகள்
7) பாலைவனத் தாவரங்கள் எவை ?
அக்கேசியா , ஈச்ச மரம் ,பாபுல்
8) எந்த மரத்தின் பொருட்கள் தோல் பதனிடப் பயன் படுகின்றன ?
சின்கோனா
9) மேற்கு வங்காளத்தில் சதுப்பு நிலக் காடுகள் எவ்வாறு அழைக்கப் படுகின்றன ?
சுந்தரவனம்
10) படகு கட்டப் பயன்படும் மரங்கள் எங்கு கிடைக்கின்றன ?
சுந்தரவனக் காடுகள்
பொருளாதாரம்
1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு ?
2005
2) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு?
1986
3) தேசிய நுகர்வோர் ஆணையம் அமைந்துள்ள இடம்?
டெல்லி
4) BIS என்றால் என்ன?
இந்தியக் தரக் குழு
5) FAO , WHO எங்கு எப்போது துவங்கப்பட்டது ?
இத்தாலி ரோம் , 1963
6) CAC – CODEX ALIMENTATION COMMISSION
7) BIS – BUREAU OF INDIAN STANDARS
8) ISO – INTERNATIONAL ORGANAISATION FOR STANDARDISATION
9) FAO – AOOD AND AGRICULTURE ORGANISATION
10) WHO – WORLD HEALTH ORAGANISATION
11) COPRA – CONSUMER PRODUCTION ORAGANISATION
மார்ச் மாதத்தின் முக்கிய தினங்கள் மற்றும் அதன் மையக்கருத்துகள்
1) பூஜ்ஜிய பாகுபாடு தினம் – மார்ச் 1
கருத்து – பாகுபாடு எற்படுத்தும் சட்டங்களை மாற்றுவதற்குச் செயல்படுவோம்
2) உலக செவித்திறன் தினம் – மார்ச் 3
கருத்து – உங்கள் செவித்திறனை சோதித்துக் கொள்ளுங்கள்
3) உலக வன விலங்கு தினம் – மார்ச் 3
கருத்து : நீருக்கடியிலான உயிரினங்கள் : மக்கள் மற்றும் கோளுக்காக
4) தேசிய பாதுகாப்பு தினம் – மார்ச் 4
இலக்கிய வகைச் சொற்கள்
இலக்கிய வகையால் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
இயற்சொல்திரிச்சொல்திசைச்சொல்வடசொல்இயற்சொல்:
கற்றவர், கல்லாதவர் என அனைவருக்கும் எளிதில் பொருள் விளங்கும்படி அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.
இயற்சொல் – இயல்பான சொல்
எ.கா: பறவை, பூனை, மனிதன், மாமரம், பூ
இயற்சொல் இரு வகைப்படும்.
1) பெயர் இயற்சொல்
2) வினை இயற்சொல்
1) பெயர் இயற்சொல்:
எளிதில் பொருள் உணர்த்தும் பெயர்ச்சொற்கள் பெயர் இயற்சொல் எனப்படும்.
(எ.கா) காற்று, நிலவு, ஞாயிறு, பலகை
2) வினை இயற்சொல்:
எளிதில் பொருள் உணருமாறு அமைந்துள்ள வினைச்சொற்கள் வினை இயற்சொல்எனப்படுமு;.
(எ.கா) படித்தான், தூங்கினான், வந்தான், சிரித்தான், பறந்தது , மேய்ந்தன.
திரிசொல்:
இயல்பு நிலையிலிருந்து மாறி கற்றவர் மட்டுமே அறிந்து கொள்ளும் வகையில் அமைந்த சொற்களைத் திரிச்சொற்கள் என்று கூறுவர்.
(எ.கா) பீலி – மயில்தொகை
உகிர் – நகம்
ஆழி – கடல்
தத்தை – கிளி
புனல் – நீர்;
ஞாலம் – உலகம்
திரிசொல் இரு வகைப்படும்
1) பெயர்த்திரிசொல்
2) வினைத் திரிசொல்
1) பெயர்த்திரிசொல்:
எளிதில் உணர முடியாது, கற்றவர்க்கு மட்டுமே பொருள் விளங்குமாறு அமைந்த பெயர்ச்சொல் ‘பெயர்த்திரிசொல்’ ஆகும்.
(எ.கா) எயில் – மதில்
நல்குரவு – வறுமை
கழை – மூங்கில்
கிழமை – உரிமை
மடி – சோம்பல்
பெயர்த்திரிசொல் இரு வகைப்படும்.
i. ஒரு பொருள் குறித்த பல பெயர்த்திரிசொல்
ii. பல பொருள் குறித்த ஒரு பெயர்த்திரிசொல்
ஒரு பொருள் குறித்த பல பெயர்த்திரிசொல்:
கமலம், கஞ்சம் முண்டகம் முளரி இவை யாவும் “தாமரை” என்னும் ஒரே பொருளை உணர்த்துகின்றன. இவ்வாறு கற்றவர்க்கு மட்டுமே பொருள் விளங்குமாறு அமைத்து ஒரே பொருளை உணர்த்தும் பல சொற்களை ஒரு பொருள் குறித்த பல பெயர்த்திரிசொல் என்று அழைக்கிறோம்.
எ.கா:
வேழம் வாரணம் கழை ஆகிய சொற்கள் “யானை” யைக் குறிக்கும்.
பல பொருள் குறித்த ஒரு பெயர்த்திரிசொல்:
ஆவி இச்சொல் உயிர் பேய் மெல்லிய புகை ஆகிய பல சொற்களை உணர்த்துகின்றது. அரிதில் பொருள் விளங்கும் இப்பெயர்ச்சொல் பல பொருள்களைத் தருவதால் அதனைக் பல பொருள் குறித்த ஒரு பெயர்த்திரிசொல் என்று அழைக்கிறோம்.
எ.கா:
ஆவணம் – முறிச்சீட்டு, கடைத்தெரு, அடிமைத்தனம்
2) வினைத்திரிசொல்:
கற்றவருக்கு மட்டுமே பொருள் விளங்கும் வகையில் அமைந்த வினைச்சொல் வினைதிரிசொல் எனப்படும்.
எ.கா: வினவினான் விளித்தான் நோக்கினான்.
வினைத்திரிசொல் இரு வகைப்படும்.
i. ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொல்
ii. பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல்
ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொல்:
செப்பினான் உரைத்தான், மொழிந்தான் இயம்பினான் இவை கற்றவர்க்கு மட்டுமே விளங்கும் வகையில் அமைந்த வினைச்சொற்களாகும். எனவே இவை வினைத் திரிசொல் என வழங்கப்படும். இச்சொற்கள் அனைத்தும் ஒரு பொருளையே தருவதால் இவற்றை ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொல் என்பர்.
பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல்:
வீசு இந்த வினைச்சொல் எறி, சிதறடி, பரவச்செய், ஆட்டு என்னும் பல பொருட்களை உணர்த்துகின்றது. இது கற்றவர்கள் மட்டுமே அறியும் சொல்லாகும். இதனைப் பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல் ஆகும்.
திசைச்சொல்:
வடமொழி அல்லாத பிறமொழிச் சொற்கள் அம்மொழிகளில் எவ்வெப்பொருளில் வழங்குகின்றனவோ அவ்வப் பொருளிலேயே தமிழிலும் வந்து வழங்குவதைத் திசைச் சொற்கள் என்கிறோம்.
தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள பிற பகுதிகளிலிருந்து தமிழில் வழங்கும் திசைச்சொற்கள்
i. கேணி – (கிணறு)
ii. பெற்றம் – (பசு)
iii. அச்சன் – (தந்தை)
iv. கடிதாசி – (கடிதம்)
v. தள்ளை – (தாய்)
vi. சாவி – (திறவு கோல்)
vii.அசல் – (மூலம்)
viii. கோர்ட் – (நீதிமன்றம்)
ix.இலாகா – (துறை)
வடசொல்:
வடமொழிச் (சமஸ்கிருதம்) சொற்கள் திரிந்தும், திரியாமலும் தமிழ் மொழியில் வந்து வழங்குமானால் அவை “வடச்சொற்கள்” எனப்படும்.
கமலம், விஷம், புஷ்பம் இவை தமிழில் வந்து வழங்கினாலும் தமிழ்சொற்கள் அல்ல வடமொழிச் (சமஸ்கிருதம்) சொற்கள்.
எ.கா: கமலம் – தாமரை
விஷம் (அ) விடம் – நஞ்சு
புஷ்பம் (புட்பம்) – மலர்
அர்ச்சனை – மலரிட்டு வழிபடுதல்
சுதந்திரம் – விடுதலை
விவாகம் – திருமணம்
பொது தமிழ் – பொருந்துதல் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
இன்சொல் – இனிய சொல்
இன்சொலன் – இனிய சொற்களைப் பேசுபவன்
இன்சொலினதே – இனிய சொற்களைப் பேசுதலே
இன்புறாஉம் – இன்பம் தரும்
இன்மை – இப்பிறவி
இரட்சித்தாணா – காப்பாற்றினானா
இணக்கவரும்படி – அவர்கள் மனம் கனியும் படி
இல்லார் – செல்வம் இல்லாதவர்
இடித்தல் – கடிந்துரைத்தல்
இடுக்கண் – துன்பம்
இசைந்த – பொருத்தமான
இருநிலம் – பெரிய உலகம்
இகழ்வார் – இழிவுபடுத்துவோர்
இறப்பினை – பிறர் செய்த துன்பத்தை
இறைந்தார் – நெறியைக் கடந்தவர்
இன்னா – தீய
இன்னாசொல் – இனிமையற்ற சொல்
இழைத்துணர்ந்து – நுட்பமாக ஆராய்ந்து
இடர் – இன்னல்
இன்னா – தீங்கு
இனிய – நன்மை
இன்மை – வறுமை
இளிவன்று – இழிவானதன்று
இருநிலம் – பெரிய நிலம்
இசைபட – புகழுடன்
இரந்து செப்பினான் – பணிந்து வேண்டினான்
இன்னல் – துன்பம்
இறைஞ்சி – பணிந்து
இழக்கம் – ஒழுக்கம் இல்லாதவர்
இடும்பை – துன்பம்
இகல் – பகை
இறுவரை – முடிவுக்காலம்
இயைந்தக்கால் – கிடைந்தபொழுது
இமையவர் – தேவர்
இறையோன் – தலைவன்
இனிதின் – இனிமையானது
இன்னல் – துன்பம்
இருத்தி – இருப்பாயாக
இந்து – நிலவு
இடர் – துன்பம்
இழக்கும் – கடிந்துரைக்கும்
இடிப்பார் – கடிந்து அறிவுரை கூறும் பெரியார்
இருள் – பகை
இரண்டும் – அறனும் இன்பமும்
இடர் – துன்பம்
இரும்பணை – பெரிய பனை
இவண் நெறியில் – இவ்வழியில்
இனை – சுற்றம்
இளைப்பாறுதல் – ஓய்வெடுத்தல்
பதினென் கீழ்கணக்கு நூல்கள் குறித்த அனைத்து தகவல்கள்
சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்.
பத்துப்பாட்டில் பத்து நூல்களும், எட்டுத்தொகையில் எட்டு நூல்களும் உள்ளன.
இவற்றை ‘மேல்கணக்கு நூல்கள்’ என்று கூறும் வழக்கமும் உண்டு.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை அறநூல்களே.
1. நாலடியார்
நாலடியார் ஆசிரியர் – சமணமுனிவர்
நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
இந்நூல் 400 பாடல்களைக் கொண்டது.
அறக்கருத்துக்களைக் கூறுவதாகும்.
‘நாலடி நானூறு’ என்னும் சிறப்புப் பெயரும் இதற்குண்டு.
இந்நூல் சமணமுனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
“நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும்வாய்க்கால் அனையார் தொடர்பு” – சமணமுனிவர்
2. நான்மணிக்கடிகை
நான்மணிக்கடிகை – ஆசிரியர் – விளம்பிநாகனார்
விளம்பி என்பது ஊர் பெயர், நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
கடிகை என்றால் அணிகலன் (நகை) ஆகும்.
நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன் பொருள்.
ஒவ்வொரு பாட்டும் நான்கு மணி மணியாக அறக் கருத்துக்களை கொண்டது.
“மனைக்கு விளக்கம் மடவாள்;மடவாள்
தனக்குத் தகைசால் புதல்வர்; மனக்கினிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்
ஓதின் புகழ்சால் உணர்வு”. – விளம்பிநாகானார்
3. இனியவை நாற்பது – பூதஞ்சேத்தனார்
ஆசிரியர் குறிப்பு
பெயர் – மதுரை தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேத்தனார்
ஊர் – மதுரை
காலம் – கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
நூல் குறிப்பு – இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. நன்மைதரும் இனிய கருத்துகளை நாற்பதுப் பாடல்களில் தொகுத்துரைப்பதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றது.
இனியவை நாற்பது
“குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே
மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்
திருவுந்தீர் வின்றேல் இனிது.”
“சலவைச் சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது” – பூதஞ்சேந்தனார்
5. பழமொழி நானூறு
கல்வியின் சிறப்பு – ஆசிரியர் – முன்றுறை அரையனார்.ஆசிரியர் குறிப்புமுன்றுறை என்பது ஊர்பெயர் அரையான் என்பது அரசனைக் குறிக்கும் சொல்.முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசனாக இருக்கலாம் அல்லது அரையன் உன்பது புலவரின் குடிப்பெயராகவும் இருக்கலாம்.நூல் குறிப்பு:
பதினெண்கீழக்கணக்கு நூல்களுள் ஒன்று பழமொழி நானூறுநானூற்று பாடல்களைக் கொண்ட நூல் இது.ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம் பெற்றுள்ளது.‘ஆற்றுணா வேண்டுவது இல்’ என்பதற்கு ‘கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம்’ என்று பொருள்.பழமொழி நானூறு
“ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை; அந்நாடு
வேற்றுநாடு ஆகர் தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவது இல்”.- முன்றுறை அரையனார்
6. ஏலாதி
ஆசிரியர் குறிப்பு
ஏலாதியை இயற்றியவர் கணமேதாவியார்.இவருக்குக் கணிமேதையர் என்னும் மற்றொரு பெயருமுண்டு.இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.இவர் ஏலாதியில் சமண சமயத்திற்கே உரிய கொல்லாமை முதலிய உயரிய அறக்கருத்துகளை வலியுறுத்திக் கூறுகிறார்.இவர் கடைச்சங்க காலத்தில் வாழ்ந்தவர்.“வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டு
நுணங்கிநூல் நோக்கி நுழையா – இணங்கிய
பால்நோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய்
நூல்நோக்கி வாழ்வான் நுனித்து”. – கணிமேதாவியார்
நூற்குறிப்பு:
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ஏலாதி.இந்நூல் சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட எணபத்தொரு வெண்பாக்களை கொண்டுள்ளது.நான்கடிகளில் ஆறு அருங்கருத்துகளை இந்நூல் நவில்கிறது.இந்நூல் தமிழருக்கு அருமருந்து போன்றது.ஏலம் என்னும் மருந்துப் பொருளை முதன்மையாகக் கொண்டு இலவங்கம் சிறுநாவற்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற்றினால் ஆன மருந்துப் பொருளுக்கு ஏலாதி என்பது பெயர்.இம்மருந்து உண்ணுபவரின் உடற்பிணியைப் போக்கும்.அதுபோல இந்நூலின் கருத்துக்கள் கற்போரின் அறியாமையை அகற்றும்.இந்நூலின் ஐம்பத்தொன்பதாவது பாடல் நமக்குப் பாடமாக அமைந்துள்ளது.
7. சிறுபஞ்சமூலம்
ஆசிரியர் குறிப்பு:
பெயர் – காரியாசான்மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் என சிறப்புப்பாயிரம் கூறுகிறது.இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர்இவரும் கணிமேதாவியாரும் ஒரு சாலை மாணக்கராவர்.பெரும்பான்மை பொது அறக்கருத்துகளும் சிறுபான்மை சமண அறக்குருத்துகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நூல் குறிப்பு:
சிறுபஞ்சமூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.கடவுள் வாழ்த்துடன் தொண்ணூற்றெழு வெண்பாக்கள் உள்ளன.கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகையும் உடல் நோயைத் தீர்ப்பன. இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள ஐந்து கருத்துகளும் மக்கள் மனநோயைப் போக்குவன.ஆகையால் இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது.“கண்வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை
எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல்- பண்வனப்புக்
கேட்டார்நன்; றென்றல் கிளர்வேந்தன் தன்னாடு
வாட்டான்நன் றென்றல் வனப்பு”. – காரியாசன்
8. முதுமொழிக்காஞ்சி
ஆசிரியர் – மதுரைக் கூடலூர் கிழார்.பிறந்த ஊர் – கூடலூர்சிறப்பு – இவர்தம் பாடல்களை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்கள் மேற்கோளாகக் கையாண்டுள்ளார்கள்.காலம் – சங்க காலத்திற்குப் பின் வாழ்ந்தவர்.நூல்
குறிப்பு:முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சி திணையின் துறைகளுள் ஒன்று.பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இந்நூல் உலகியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்து இயம்புகிறது.அறவுரைக்கோவை எனவும் வழங்கப்படுகிறது.பத்து அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்துச் செய்யுள் உள்ளன.இந்நூல் நூறு பாடல்களால் ஆனது.சிறந்த பத்து:
(சிறந்ததெனக் கூறப்படும் பத்துப் பொருளைத் தன்னகத்தே கொண்டிருப்பது சிறந்த பத்து)
ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலில் சிறந்தன்(று) ஒழுக்கம் உடைமை
காதலில் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்
மேதையில் சிறந்தன்று கற்றது மறவாமை
வண்மையில் சிறந்தன்று வாய்மை யுடைமை
இளமையில் சிறந்தன்று மெய்பிணி இன்மை
நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று
குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று
கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று
செற்றாரைச் செறுத்தலில் தற்செய்கை சிறந்தன்று
முன்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று. – மதுரைக் கூடலூர்கிழார்
திருக்குறள் குறித்த அனைத்து தகவல்கள்
திருக்குறள் – திரு + குறள்
இரண்டு அடிகளாலான குறள் வெண்பாக்களால் ஆனது.
திருக்குறளை திருவள்ளுவர் எழுதினார்.
திருக்குறள் முப்பால்களை கொண்டது. அவை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகியவை ஆகும்.
திருக்குறள் 133 அதிகாரங்களையும் 1330 குறள்களையும் கொண்டது.
திருக்குறளில் பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைத்துள்ளன.
திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது.
உலக மொழியில் உள்ள அறநூல்களில் முதன்மையானது திருக்குறள்.
இது பதினென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
உலக மொழிகளில் பல மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள்.
நூற்றெழு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.